மூடநம்பிக்கையில் மூழ்கிய குடும்பம்.. 30 வருடங்களுக்கு முன் இறந்த ஆண், பெண்ணுக்கு திருமணம்!

 
இறந்தவர்களுக்கு திருமணம்

கர்நாடக மாநிலம் புத்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை உயிரிழந்தது. அதன்பிறகு இவர்களது குடும்பத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கிடையில், குடும்பம் சில பிரச்சனைகளை எதிர்கொண்டது.

5வது திருமணம்

பிரச்னைகளில் இருந்து விடுபட, சிலர், 'உங்கள் வீட்டில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு, தற்போது திருமணம் செய்து வைத்தால், பிரச்னை தீரும்' என, குடும்பத்தினரிடம் கூறினர். நம்பிக்கையில் குடும்பத்தினர் நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளனர். அதில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தங்கள் 'சமூகத்தில்' (சாதியிலேயே) மாப்பிள்ளை வேண்டும் என்று இறந்து போன மகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த சிலர் மணமகளின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டனர். ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் பேசினர். பட்டு புடவை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம், பழம், பூக்கள் ஆகியவற்றை முறையே வாங்கி, 30 வருடங்களுக்கு முன் இறந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு முறையே, இரு குடும்பத்தினரும்  கூடி திருமணம் செய்து வழிப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருமணம் கல்யாணம் கும்பம்

இதேபோல் தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் கடந்த வாரம் இளம் வயதில் இறந்த பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web