வைரல் வீடியோ... பிரபல ரவுடி ஜெயிலிலிருந்து வந்ததை கொண்டாடிய ஆதரவாளர்கள்... மீண்டும் பரிதாபம்!

 
ஹர்ஷத்


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் வசித்து வருபவர் ஹர்ஷத் பதாங்கர் . இவர் அந்த ஏரியாவில் பிரபல ரௌடி. இவர் பல குற்ற வழக்குகளில் சிக்கியதில் மும்பை போலீசார் ஹர்ஷத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில்  தண்டனை காலம் முடிவடைந்து ஜூலை 23ம் தேதி சிறையை விட்டு வெளியில் வந்தார்.

 அவர் சிறையில் இருந்து வெளியே ‌ வந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களில் காத்திருந்தனர். ஹர்ஷத்  திறந்த வெளி காரில் கையசைத்தவாறு சென்றார்.  அவருடைய ஆதரவாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக அணிதிரண்டு பின்தொடர்ந்து சென்றனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. மக்களிடையே பெரும் சர்ச்சையையும், பலவிதமான கண்டனங்களும் எழுந்தன.  

இந்த வீடியோ  காவல்துறையினரின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  ரௌடி அனுமதி இன்றி பேரணி நடத்திய குற்றத்திற்காக ஹர்ஷத்  மீண்டும் ‌ கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஹர்ஷத்துடன்  அவருடைய ஆதரவாளர்கள் ‌6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஹர்ஷத் ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web