இனி பெற்றோர்களைப் பிள்ளைகள் பராமரிக்காவிட்டால் சொத்துகளை ரத்து செய்யலாம்... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
நீதிமன்றம்

வயதானவர்களின் வயிற்றில் பால் வார்த்ததைப் போன்றதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இனி பெற்றோர்களை பராமரிக்க பிள்ளைகள் தவறினால், சொத்துக்களை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்றைய வாழ்க்கை முறையில் பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைத்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் பெற்றோர்கள் தான் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என சொத்தை பிள்ளைகள் பேரில் எழுதி வைத்து விடுகின்றனர். சொத்து கைக்கு வந்ததும் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காமல் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவர்களுக்கு ஒரு நல்ல பதில் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் வசித்து வரும்  வயதான பெண்  தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடமிருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

நீதிமன்றம்
அத்துடன் தன்னுடைய தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காகத் தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது  என கூறி  வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின்மீதான விசாரணை  நடைபெற்று வந்த நிலையில் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.

அதில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் தற்போது உருவாகியுள்ளது.  சொத்துகளை எழுதிக் கொடுத்த பிறகு பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.

நீதிமன்றம்
இது போன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்குப் பெற்றோர் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து விடலாம். அதே போல் தான பத்திரத்தைச் செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருப்பதாக அறிவித்துள்ளது.

சொத்துகளை எழுதி வைத்தவருக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளைச் சொத்துகளைப் பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சொத்துகளை எழுதிக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு மூத்த குடிமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web