உயிரை பறித்த சந்தேகம்.. கணவருடன் தகராறு செய்த வந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!
ஐஸ்வர்யா என்ற பெண் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தார். இவர் பகலகுண்டே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில், நவீன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதில் கணவரின் நடத்தையில் ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு அவருடன் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு நவீன் மனைவிக்கு தெரிவிக்காமல் சுற்றுலா சென்றுள்ளார்.வீடு திரும்பிய தனது கணவருடன் ஐஸ்வர்யா ஒரு வாரமாக தகராறு செய்துள்ளார். இதில், கடும் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா நேற்று காலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது அவருடைய கணவர் தர்மஸ்தலா சென்றிருந்தார்.

கணவர் நவீன் வேறொரு பெண்ணுடன் அங்கு சென்றிருப்பதாக நினைத்து மனமுடைந்தார். இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
