மனைவி நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை.. அதிர்ச்சி பின்னணி!

 
மோகன்

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்பநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் ராயபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (35). தம்பதிக்கு சாய் சுவாதி (13) என்ற மகளும், தேஜஸ் (5) என்ற மகனும் உள்ளனர். சாய் ஸ்வாதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், இவரக்கும், அவரது மனைவி யமுனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யமுனா தனது கணவர் மோகன் மீது புகார் அளித்தார். அதன்பிறகு, யமுனா தனது மகள் சாய் சுவாதி மற்றும் மகன் தேஜஸுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு மோகன் தனது மனைவி யமுனா வசித்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மோகன் இனி தவறு செய்ய மாட்டேன் என்று கூறி சமாதானம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். யமுனா அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி மாலை ஆறரை மணியளவில் வேலை முடிந்து யமுனா வீட்டுக்கு வந்தார்.
'
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாய் சுவாதி கழுத்தை நெரித்தும், அவரது மகன் தேஜஸ் கழுத்து நெரிக்கப்பட்டும் இறந்து கிடந்தார். அதைப் பார்த்து யமுனா கதறி அழுதாள். அதே அறையில் மோகன் தூக்கில் தொங்கினார். பின்னர் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், மகள் மற்றும் மகனைக் கொன்றுவிட்டு மோகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த துயரமான முடிவுக்கு என்ன காரணம் என்று யமுனாவிடம் போலீசார் கேட்டனர். அப்போது, குடும்ப பிரச்னை மற்றும் என் மீதான கோபம் காரணமாக குழந்தைகளை அநியாயமாக கொன்றுவிட்டதாக யமுனா கண்ணீருடன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web