மனைவியை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்ட கணவன்... பிளாஸ்டிக் கவரில் கொண்டு சென்ற கொடூரம்!

 
மாரிமுத்து

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மாரிமுத்து (35) என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் (30) வசித்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சந்தியா, அவ்வப்போது கணவரை பார்க்க வந்து செல்வதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, இவர்களது இரண்டு குழந்தைகளும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விடுதியில் படித்து வருகின்றனர்.

இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சந்தியாவுக்கும், முத்துமாரிக்கும் நீண்ட நேரம் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சில நாய்கள் மாரிமுத்து இரண்டு பைகளில் எதையோ எடுத்துச் செல்வதைக் கண்டு அவரைத் தாக்கிக் கொண்டே இருந்தன. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் பன்றி இறைச்சி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மனைவி சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாரிமுத்து, அவரை வெட்டிக் கொன்று, உடலை பன்றி இறைச்சி போல் வெட்டி, தண்ணீரில் கழுவி, பையில் அடைத்து, அப்புறப்படுத்த முயன்றார். இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web