ஆர்.பி.ஐ துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்.. அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் தமிழர்கள்!

 
ஆர்பிஐ சுவாமிநாதன்

ஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ், துணை கவர்னர்களாக மைக்கேல் தேவபிரத பத்ரா, ராஜேஷ்வர் ராவ், ரவிசங்கர் மற்றும் எம்.கே.ஜெயின் ஆகியோர் உள்ளனர். இதில், எம்.கே. ஜெயின் நேற்று ஓய்வு பெற்றதால், காலியாக இருந்த அந்த இடத்துக்கு, சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு துணை கவர்னர்களில் ஒரு இடம் பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐ முன்னாள் அதிகாரியான சுவாமிநாதன் ஜானகிராமன் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

பொருளாதாரத்தை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்! நிர்மலா சீதாராமன் !

இவர் இந்த பதவியில் மூன்றாண்டுகள் பணியாற்றுவார். கும்பகோணத்தில் பிறந்த சுவாமிநாதன் ஜானகிராமன், எஸ்பிஐ வங்கியில், சில்லறை மற்றும் பெரு நிறுவன வங்கியியல், வர்த்தக நிதியியல் மற்றும் நடவடிக்கைகள், டிஜிட்டல் வசதிகள் மேம்பாடு உட்பட பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார். ஆர்பிஐ வங்கியில் ஜெயின் கவனித்து வந்த மேற்பார்வை துறை, நிதி சேர்த்தல் மற்றும் மேம்பாட்டு துறைகளை சுவாமிநாதன் ஜானகிராமன் கவனிப்பார் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அனந்த நாகேஸ்வரன்

தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒருவர் இந்திய அளவில் முக்கிய பதவி வகிப்பது நமக்கு பெருமை என்பதைவிட நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனைத் தொடர்ந்து தற்பொழுது சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web