ஸ்வாதி மலிவால் குற்றச்சாட்டு பொய்; பிபவ் குமார் போலீசில் புகார்!

 
ஸ்வாதி மலிவால்

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால், தன் மீது பொய் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்திக்க, ஆம் ஆத்மி எம்பி-யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மலிவால், கடந்த 13ம் தேதி அன்று கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சென்றிருந்தார்.


 

அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்வாதி மலிவாலிடம் டெல்லி போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஸ்வாதி மலிவால் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஸ்வாதி மலிவால்

இந்நிலையில் ஸ்வாதி மலிவால் தன் மீது பொய்யான புகாரை போலீசாரிடம் அளித்துள்ளதாக பிபவ்குமார் தரப்பிலிருந்து டெல்லி போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் பதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில், “கடந்த 13ம் தேதி காலை முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க வந்த எம்பி-சுவாதி மலிவாலிடம், சந்திப்பதற்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பதற்காக கேட்கப்பட்டது. ஆனால் அவரிடம் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கான அனுமதி ஆவணம் இல்லை. பாதுகாவலர்கள் தடுத்தும் மலிவால் வலுக்கட்டாயமாக முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!