மாட்ரிட் ஓபன் டென்னிஸ்... டென்னிஸ் வீராங்கனை ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன்!

 
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக்

ஸ்பெயினில் நடைப்பெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான போலாந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலென்காவுடன்(26) மோதிய ஸ்வியாடெக் (22  7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக்

2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சபலென்கா 6-4 என வென்று பதிலடி கொடுக்க போட்டியில் சமநிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாக தங்கள் சர்வீஸ் ஆட்டத்தில் புள்ளிகளைக் குவித்து முன்னேற, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

3 மணி, 11 நிமிடத்துக்கு நடந்த இப்போட்டியில் ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் போராடி வென்று முதல் முறையாக மாட்ரிட் ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தார். சபலென்கா 3 முறை சாம்பியன்ஷிப் பாயின்ட் வரை சென்றும், அதை இகா முறியடித்து கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் 3வது சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்வியாடெக், மொத்தம் 20 பட்டங்களை வசப்படுத்தி உள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web