திருச்செந்தூர் கடலில் நீராடத் தடை... பக்தர்கள் ஏமாற்றம்...!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைகள் , ஏரிகள், நீர்நிலைகள் வேகவேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் காற்றின் வேகமும் அலையின் வேகமும் அதிகமாக உள்ளது. இதனால் கோவில் கடற்கரையில் பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் கோவிலில் அதிகமான பக்தர்கள் தங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படைகள் பிரிவு, தமிழக காவல்துறையினர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு செல்லாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!