டி20 தொடர்... பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு!
பாகிஸ்தான், ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரும் 17-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில், அணிகள் தங்களுக்குள் இருமுறை மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தொடக்க ஆட்டமாக பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதும்
இந்நிலையில், பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி, பகர் ஜமான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி: சல்மான் ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், ஷாகீன் அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
