T20 World Cup: இன்று இந்தியா அயர்லாந்து மோதல்... பிட்ச் ரிப்போர்ட்... மழை குறுக்கிட வாய்ப்பு அதிகம்!

 
T20 World Cup: இன்று இந்தியா அயர்லாந்து மோதல்... பிட்ச் ரிப்போர்ட்... மழை குறுக்கிட வாய்ப்பு அதிகம்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை அயர்லாந்துக்கு எதிராக துவங்குகிறது.

இந்திய அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும், அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னியும் தலைமை வகிக்கின்றனர். டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்குவதில் உறுதியா உள்ள அதே சமயம் அயர்லாந்து அணியை இன்றைய விளையாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 

...

இன்றைய போட்டி நடைப்பெறும் நியூயார்க்கின் நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மைதானத்தைப் போல டிராப் -இன் பிட்ச் வகையைச் சேர்ந்தது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்த ஒரே டி20 உலகக் கோப்பை போட்டியில், பேட்ஸ்மேன்கள் பந்தை மிடில் ஆர்டரில் விளையாட ரொம்பவே சிரமப்பட்டனர். இங்குள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானது என்றும் அவுட்பீல்டு மெதுவாக உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஸ்பின்னர்கள் மிகவும் திறம்பட செயல்படுவார்கள்.

இங்குள்ள ஆடுகளம் பந்தின் வேகத்தைக் குறைக்கும் போக்கை இதுவரை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் சில ஆரம்ப ஸ்விங்கைப் பெற்றுள்ளனர். எனவே, இந்த மைதானம் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தை வழங்கக்கூடும். அதிகளவில் ரன்களைக் குவிப்பவர்கள் இந்த மைதானத்தில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே ரன்களை குவிக்க நேரிடும். 

T20 World Cup: இன்று இந்தியா அயர்லாந்து மோதல்... பிட்ச் ரிப்போர்ட்... மழை குறுக்கிட வாய்ப்பு அதிகம்!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரேயொரு டி20 உலகக் கோப்பை போட்டியில், மிகக் குறைவான ரன்களே எடுக்கப்பட்டன. ஒட்டுமொத்த இலங்கை அணியும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. தென்னாப்பிரிக்காவும் 16.2 ஓவர்களில் இலங்கையை எதிர்த்து விளையாடி வெற்றி பெற கடுமையாக போராடியது.

நசாவ் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web