பயன்படுத்திக்கோங்க... இன்று சென்னையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்!
சென்னையில் வசிப்பவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னையில் 9 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் செப்.3ம் தேதி 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

அதன் படி, இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-20ல் சந்தான கிருஷ்ணன் தெருவில் உள்ள வ.உ.சி. மைதானம், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) வார்டு-55ல் ஏழுகிணறு, புனித சேவியர் தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம். திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு.76ல் பட்டாளம், ஸ்டாரன்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 6 அலுவலகம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் ஷெனாய் நகர், ஏ.பிளாக் 12வது தெருவில் உள்ள அம்மா அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-125ல் மயிலாப்பூர். சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சந்தோம் மேல்நிலைப்பள்ளி உள்ளரங்கம் கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-140ல் மேற்கு மாம்பலம், நாகரத்தினம்மாள் காலனியில் உள்ள எஸ்.வி. நாகரத்தினம்மாள் திருமண மண்டபம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-145ல் நெற்குன்றம், பி.எச்.சாலையில் உள்ள வெங்காய மண்டி மைதானம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12) வார்டு-156ல் முகலிவாக்கம், பிருந்தாவன் கார்டன் விரிவில் உள்ள சமுதாயக் கூடம். சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-193ல் துரைப்பாக்கம். சி.எல். மேத்தா கல்லூரி ஆகிய 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
