பொம்மை துப்பாக்கியுடன் ரீல்ஸ் எடுத்து பந்தா.. இன்ஸ்டா இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்!

 
அருண்

பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் தனது இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீப காலமாக தங்க நகைகள் அணிந்து, அருகில் துப்பாக்கியுடன் 2 பேர் நிற்பதை வீடியோ எடுத்துள்ளார். குறிப்பாக அவர் பொது இடங்களில் இருக்கும் போது ஏ.கே. 47 கலிபர் துப்பாக்கியை ஏந்தியபடி மக்களுடன் நடப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனால், பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக புகார் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் ஆவேசமாக நடந்து செல்வதை ரீல்ஸ்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் போலி துப்பாக்கிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவேற்றம் செய்ததாக கூறி அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web