குடை எடுத்திட்டு போங்க!! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்!!

 
மழை

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை மே8ம் தேதி  திங்கட்கிழமை  ஒரு  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 9ம் தேதி செவ்வாய்கிழமை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் . இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

மழை

இந்நிலையில் தமிழகத்தில்  அடுத்த 3 மணி நேரத்தில்  சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை  மறுநாள் மே 9ம் தேதி  செவ்வாய்க்கிழமை  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்த படுகிறார்கள். ஏற்கனவே கடலுக்கு சென்றிருக்கும் மீனவர்கள்  இன்று இரவுக்குள் கரைக்கு திரும்பச் சொல்லி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web