’என் எக்ஸ் லவ்வர் கிட்டயா பேசுற’.. இளைஞரை அடித்தே கொன்ற தனியார் நிறுவன ஊழியர்!

 
தரணிதரன்

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (34). இவர் கடந்த 6 மாதமாக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதித்துறையில் பணியாற்றி வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த தரணிதரன் (34) அதே நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக டெவலப்மென்ட் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் தரணிதரனின் முன்னாள் காதலியிடம் ஹரிஹரன் பேசி வந்துள்ளார்.

சாதி சண்டை

இந்நிலையில் நேற்றிரவு ஹரிஹரன் மது குடித்துவிட்டு தான் வேலை செய்யும் அலுவலகம் அருகே வந்து தரணிதரனுக்கு போன் செய்து, ‘‘உன் முன்னாள் காதலியிடம் பேசுகிறேன்.. என்ன செய்ய முடியும்?’’ என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்து இறங்கி வந்த தரணிதரனுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தரணிதரன், ஹரிஹரனின் நெற்றி மற்றும் மார்பில் சரமாரியாக  கைகளால் பலமாக குத்தியுள்ளார். இதில், ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் தரணிதரன் போலீசில் சரணடைந்தார். துரைபாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web