”7 அடி 2 அங்குலம்” நாட்டிலேயே உயரமான மனிதர்!

 
குணசிங்கம் கஜேந்திரன்

 இலங்கை நாட்டில் மிக உயரமான மனிதராக அறியப்படுபவர் குணசிங்கம் கஜேந்திரன்.  7அடி 2 அங்குலம் உயரம் கொண்ட இவர்  தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், உதவி செய்யும் படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகிறார்.  யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர்.

குணசிங்கம் கஜேந்திரன்

இவர்  7 அடி 2 அங்குலம் உயரம் இருப்பதால் இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார். இவருக்கு 2 பிள்ளைகள் . 45 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.  அதிக உயரமாக இருப்பதால்  ஆட்டோவிற்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாக உள்ளது.   தனது அசாதாரண உயரத்தால் தினமும் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற செருப்புகள் கூட கிடைக்கவில்லை என  தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்தே தனக்கு கால்களுக்கு ஏற்ற செருப்புகள் வாங்கும் நிலை இருப்பதாக கூறியுள்ளார்.  

இலங்கையின் உயர்ந்த மனிதனாக இருந்தாலும்   வழங்கவேண்டிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என குறை கூறுகிறார்.  இவரது குடும்பம் தற்போது மிகவும் வறுமை நிலையில் காணப்படுகிறது. இவர் ஒரு  விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தமையால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன.  உலகின் மிக உயர்ந்த மனிதரான சுல்தான் கோஷன் 8 அடி 2 அங்குலம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web