வைரல் வீடியோ!! எவரெஸ்ட் சிகரத்திலிருந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழ் பெண்!!

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியில் வசித்து வருபவர் முத்தமிழ் செல்வி . இவருக்கு வயது 34. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வந்தார். முத்தமிழ் செல்வி, மலையேற்றம், கண்களை மூடியவாறு மலையிலிருந்து இறங்குதல் , வில் வித்தையில் சாதனை, குதிரையேற்றம் என பல சாதனைகளை புரிந்தவர். அவருக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஆசை வந்தது.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முத்தமிழ் செல்வி அவர்கள் எவரெஸ்ட் சிகரம் தொட தமிழ்நாடு அரசு சார்பிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பிலும் நிதி உதவி அளித்ததற்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து நன்றி தெரிவித்தார்!#DMK #CMMKStalin #Udhayanidhi pic.twitter.com/SZpiWW59uX
— DMK IT WING (@DMKITwing) April 21, 2023
இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் பயிற்சியாளர் திரிலோகசந்தர் உதவியுடன் முத்தமிழ் செல்வி தொடர்ந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில், முதல்வரிடம் உதவி கேட்டு மனு அளித்திருந்தார். முதல்வர் அவரை நேரில் அழைத்து அவருக்கு 10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். அதே நேரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 15 லட்சம் அளித்து ஊக்கம் அளித்தார்.
இதன் மூலம் தனது சாதனை பயணத்தை தொடங்கிய முத்தமிழ் செல்வி, மே 23ம் தேதி எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் அடைந்து அங்கேயே வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் திரிலோகசந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் சில தினங்களில் விமானம் மூலம் சென்னை வருகை தர உள்ளார். அவரை உள்ளூரில் வரவேற்க விளையாட்டு துறை சார்பில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!