ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்!

 
ஆபரேஷன் சிந்தூர் தமிழக ராணுவ வீரர் பஹல்காம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர், பணியில் இருந்த போது திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். ராணுவ வீரர் சரணின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்

 கொடூரம்... பஹல்காம் தாக்குதலில் பலியான 26 பேரில் 20 பேரின் பேண்ட் ஜிப் அவிழ்க்கப்பட்டு கீழே இழுக்கப்பட்டிருந்தன... அதிகாரிகள் தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரணும் பணியாற்றினார். கடந்த 8 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த சரணுக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தை உள்ளனர்.

இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் சரண் பணியாற்றி வந்தார். கடந்த 22ம் தேதி ராணுவ வீரர் சரண் பணியில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, சரணின் உடல் நேற்று சொந்த ஊரான முத்துசாமிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?