நாளை தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூலை 31ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை கலந்தாய்வு தொடங்குகிறது.

முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 15 உடன் முடிந்த நிலையில், ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை ஆக்ஸ்ட் 4ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆக்ஸ்ட் 11ம் தேதி முதல் நடைபெறும்; பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கும். முதலாமாண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
