இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி - புதுக்கோட்டை பயணம்... 44,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் இரவு 9 மணியளவில் திருச்சி சென்று, அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா மாளிகை சென்று தங்க உள்ளார்.
நாளை காலை 8.45 மணிக்கு வயலூரில் நடைபெறும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்ப திருமண விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்துக்கொள்கிறார். விழாவில் ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.223.06 கோடி மதிப்பில் நிறைவடைந்த 577 திட்டங்களை திறந்து வைக்கிறார்.
அதோடு, ரூ.348.43 கோடி மதிப்பில் 44,093 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றவுள்ளார். விழா முடிந்த பின் முதல்வர் மீண்டும் திருச்சி வருவதுடன், பொன்மலையில் பாவை குழுமங்களின் *அன்புச்சோலை* முதியோர் இல்லத்தை மதியம் 1 மணிக்கு திறந்து வைக்கிறார்.

பின்னர் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்து, மதிய உணவிற்குப் பிறகு திருச்சி விமான நிலையம் செல்லுகிறார். பிற்பகல் 3 மணியளவில் சென்னைக்கு திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு அமர்வுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
