இன்று தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடக்கம்..!!

 
தமிழ்நாடு கிரிக்கெட் லீக்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்  2016ல்   தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்டது. இதுவரை  6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். தொடர் கோவையில் இன்று தொடங்கி, ஜூலை 12ம் தேதி வரை திண்டுக்கல், சேலம் மற்றும் நெல்லை   மாவட்டங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.இத்தொடரில்   நடப்பு சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் ஆகியவற்றுடன்  நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், பால்சி திருச்சி மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.


இந்த தொடரில் தான் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியை போல வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர். கடந்த 6 தொடரில் வரைவு முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் கோவையில் 6 போட்டிகளும், திண்டுக்கல்லில் 7 போட்டிகளும், சேலத்தில் 8 போட்டிகளும் மற்றும் நெல்லையில் 7 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் லீக்

டரில் 28 லீக் போட்டிகள் உள்பட மொத்தம் 32 போட்டிகள் 25 தினங்களில் நடக்கிறது. 7 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெற உள்ளன.  லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஜூலை 5ம் தேதி லீக் சுற்று முடிவடைகிறது. ஜூலை 7ம் தேதி பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. அன்று முதல் தகுதி சுற்றும் (குவாலி பையர்-1), 8-ம் தேதி வெளியேற்றுதல் ஆட்டமும் (எலிமினேட்டர்) சேலத்தில் நடக்கிறது. 2- வது தகுதி சுற்று (குவாலி பையர் -2) 10-ம் தேதியும், இறுதிப் போட்டி 12-ம் தேதியும் நெல்லையில் நடைபெறுகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web