சூப்பர்... மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு!

 
மோடி ஐஸ்வர்யா மேனன்

 இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மோடி 3 வது முறையாக பிரதமராக உள்ளார். இதற்கான கடிதத்தை குடியரசு தலைவரிடம் மோடி சமர்ப்பித்துள்ளார். இதன்படி  மோடி தலைமையில் புதிய அமைச்சரவை  ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு  பதவி ஏற்க உள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள,  உலகம் முழுவதும் 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விவிஐபிக்களுடன் துப்புரவு தொழிலாளர்கள், திருநங்கைகள், வந்தே பாரத் ரயில் உருவாக்கத்தில் பணி செய்தவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோடியே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடி
ஐஸ்வர்யாவை பொறுத்தவரை  இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி  ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை உடனுக்குடன் ஏற்று  செயல்படும் இவரது தனித்திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப்பட்டுள்ளது. சென்னை - விஜயவாடா, சென்னை - கோயம்புத்தூர் பிரிவில் தொடங்கிய  நாள் முதலே ஐஸ்வர்யா மேனன் வந்தே பாரத் ரயில்களில் பணிபுரிந்து வந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஐஸ்வர்யா மேனனுக்கு கலந்து கொள்ள  அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது  தெற்கு ரயில்வேக்கு கிடைத்த பெருமிதம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web