உயிர் பிழைக்க ஈரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 
6 மீனவர்கள்

ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஈரானுக்கு வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சென்றனர். ஆனால் அவர்களின் கனவுகளை எல்லாம் தகர்க்கும் விதத்தில் அங்கு கொடூரம் நடந்தது.. ஈரானில் உள்ள அரேபிய முதலாளி மீனவர்களுக்கு பணம் தராமல் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த மீனவர்கள் வேறு வழியின்றி ஈரானில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு வரும் நாடுகளின் கடலோர காவல்படையினர் அனைவரும் உதவிய நிலையில், இந்தியாவுக்குள் நுழைந்த போது டீசல் தீர்ந்தது. பின் உயிருக்கு போராடிய 6 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

ஈரானுக்குப் பரிச்சயமில்லாத அரபு முதலாளிகளை நம்பியிருந்தால், இதேபோன்ற சூழ்நிலையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதால், வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள்,  கவனத்துடன் செல்லுமாறும், அங்கிருந்து வரும் மீனவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிக வருமானத்தை எதிர்பார்த்து வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த மீனவர்களின் வாழ்க்கை ஒரு பாடம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web