மாஸ்.. 13 வயசு தான்... சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான சர்வதேச விருது வென்ற தமிழக சிறுமி!

 
அகஸ்தி

 கடந்த வாரத்தில் நார்வே தமிழ் திரைப்பட  விருது வழங்கும் விழா  நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த அறிமுக அனிமேஷன் படத்திற்கான விருதை 13 வயது அகஸ்தி பெற்றுள்ளார். இவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்.  7 ம் வகுப்பு படித்து வரும் அகஸ்தி ‘குண்டான் சட்டி’ என்கிற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி குழந்தைகள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது.  15 வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த அறிமுக அனிமேஷன் படத்திற்கான விருது அகஸ்திக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதால்  மேலும் படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும்,  ஊக்கமும் அளிப்பதாக  அகஸ்தி தெரிவித்துள்ளார்.

குண்டான்சட்டி
இவரைப் போன்ற  மாணவிகள் சரியாக வழிநடத்தப் பட்டு முறையான பயிற்சி வழங்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் அவர் பெரியளவில் சாதிப்பார் என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இந்திய சினிமா இன்னும் பின் தங்கிய நிலையில் இருந்து வரும் நிலையில் இவரைப் போல்  திறமையான கலைஞர்களும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி படங்களை இயக்கினால் உலக அளவில் தமிழ் சினிமாவின் தரம் உயரும்.   ஒரு சில நொடி காட்சிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. ஆதிபுருஷ் போன்ற சில படங்கள் கோடிக்கணக்கான ரூபாய் தயாரிப்பில் இருந்தும்  அவற்றின் தரம் சராசரிக்கும் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.  பிரபாஸ் நடித்து  வெளியாக இருக்கும் கல்கி படத்திற்கான வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் மேல் ரசிகர்களுக்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web