23 வகை நாய் இனங்களை வளர்க்கத் தடை.. உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு !
சமீபகாலமாக நாய்க்கடியால் விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பூங்காவில் கடித்த நாயால் 5 வயது சிறுமிக்கு இன்று 2 மணி நேரம் அறுவைசிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு அதிரடி உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வீடுகளில் வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவைகள் இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
மே 6ம் தேதி சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வைலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவித்துள்ளன. இச்சம்பவத்தால் மக்கள் மிகுந்த மனவருத்தத்திலும், அச்சத்திலும் உள்ளனர். 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை. இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனக் கூறப்பட்டதால் இந்த இனங்களுக்கும், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் மற்றும் தற்காப்பு முககவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும்.
அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை மட்டுமே இருக்க வேண்டும். தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!