மனைவி,பேரனுடன் டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர்... 5 நாட்கள் சுற்றுப்பயணம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி மற்றும் பேரனுடன் 5 நாள் பயணமாக விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.தமிழ்நாடு மாநில ஆளிநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வருகை தந்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் பேரன் ஆகியோரும் உடன் வந்தனர். 5 நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், அங்கு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் டெல்லி செல்லும் போது, வழக்கமாக விமான நிலையத்தில் உள்ள பழைய முக்கிய பிரமுகர்கள் வாயில் வழியாக உள்ளே செல்வது வழக்கம். அரசாங்க ரீதியான பயணங்களின் போது, பாதுகாப்பு கருதி அவர் இந்த பாதையில் செல்வது வழக்கம். இன்று காலை அவரது பேரனுடன் வருகை தந்ததால், அவர் முக்கிய பிரமுகர்களுக்கான வழியை தவிர்த்து விட்டு 2வது உள்நாட்டு முனையம் வழியாக விமான நிலையத்திற்குள் சென்றார்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
