தமிழகம் முழுவதும் செப்.5ல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களையும், செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மூட உத்தரவிட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தில் எந்த மதுபான கடையும் இயங்காது என்றும், அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள், தனியார் மதுக்கூடங்கள், பார்கள் என அனைத்தும் செப்டம்பர் 5ம் தேதி இயங்காது என்றும், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
