ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் கரூரில் மட்டும் 41% வாக்காளர்கள் திமுக உறுப்பினர்கள்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா எனக் கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உட்பட பல எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல;
நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம்… pic.twitter.com/aioJqEdV3p
— M.K.Stalin (@mkstalin) July 12, 2025
தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி #ஓரணியில்_தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்!

இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் @DMKITwing அமைத்துள்ள "War Room"-ஐத் திறந்து வைத்தேன். விறுவிறுவென நடைபெற்று வரும் #OraniyilTamilNadu பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
