அமெரிக்காவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக ஐபிஎஸ் தம்பதி.. அடுத்தடுத்து சாதனை!

 
அஜிதா பேகம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சதீஷ் பினோ - இவரது மனைவி அஜிதா பேகம் ஆகிய இருவரும் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். 2008ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தற்போது கேரள கேடரில் டிஐஜியாக உள்ளார். 

இவரது மனைவி அஜிதா பேகம் கோவையைச் சேர்ந்தவர். இவர், 2008ம் ஆண்டு காஷ்மீர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதன் பின்னர் கேரள கேடருக்கு மாறிய இவரும் தற்போது டிஐஜியாக உள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்குக முன் கூடுதல் பயிற்சிக்காக ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமிக்கு சென்றனர். 

அஜிதா பேகம்

அங்கு பயிற்சியில் இருந்த போது தான் அமெரிக்காவின் மிகக் கடினமான இரும்பு மனிதன் (அயன் மேன்) போட்டியில் பங்கேற்க ஆர்வம் வந்தது. இது நீச்சல், சைக்கிளிங் மற்றும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஆகியவை கொண்ட ஒரு டிரையத்தலான் போட்டியாகும். 3.8 கிமீ தொலைவு நீச்சல், 180 கிமீ சைக்கிளிங், மற்றும் 42 கிமீ தூர மாரத்தான் ஆகிய மூன்றையும் 17 மணி நேரத்தில் அடுத்தடுத்து முடிக்க வேண்டும். 

அதேநேரத்தில் அஜிதா பேகத்திற்கு அமெரிக்காவிலுள்ள ஹூபர்ட் எச். ஹம்ப்ரேவில் மேற்படிப்பு படிக்க அனுமதி கிடைத்தது. அவருடன் சதீஷ் பினோவும் சென்றார். அங்கு சென்று இரும்பு மனிதன் போட்டிக்கான ஆயத்த ஏற்பாடுகளை இருவரும் செய்து வந்தனர். 

அஜிதா பேகம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் சதீஷ் பினோவுக்கு இந்த பட்டம் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் ஐபிஎஸ் தம்பதியான சதீஷ் பினோ -  அஜிதா பேகம் இருவரும் இணைந்து போட்டியில் கலந்து கொண்டு இரும்பு மனிதன் பட்டத்தை வென்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web