தமிழகமே அதிர்ச்சி... வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை வெறித்தனமாய் வெட்டிகொன்ற தந்தை!
என்ன தான் பிரச்சனை என்றாலும் ஒரு அப்பா இப்படியெல்லாம் கூட செய்வாரா என்று தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. திராவிட மாடலோ, திராவிடம் இல்லாத மாடலோ... எங்களை நிம்மதியாக வாழ விடுங்கய்யா.. என்று பொதுமக்கள் கதறும் அளவுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது திமுகவோ, அதிமுகவோ சாராயத்தால் மது போதைக்கு தமிழகத்தை அடிமையாக்கி வருவதை யாராலும் மறுக்க முடியாது.
சமீபமாக மது பழக்கத்துடன் தமிழகத்தில் பலரும் கஞ்சா போதைக்கும் அடிமையாகி வருகின்றனர். 13 வயது சிறுவர்கள் எல்லாம் கஞ்சா விற்பனையிலும், கஞ்சா போதையிலும் போலீசாரிடம் சிக்குகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு இது குறித்து கவலையே கிடையாதா என்று முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு பதற செய்கிறது தமிழகத்தின் நிலைமை.
இந்நிலையில் மொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுக்கிற விதமாக, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கஞ்சா போதையில் இருந்த தந்தையே, மண்வெட்டியால் வெறித்தனமாக வெட்டிக் கொன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரியதன் (82). இவருடைய மகன் பாலமுருகன் (38). கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு தந்தையும் மகனும் சேர்ந்து நேற்று முன் தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தூங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலையில் பிரியாதன் கஞ்சா போதையில் மண் வெட்டியைக் கொண்டு சரமாரியாக தூங்கிக் கொண்டிருந்த மகனின் கழுத்து, தலை பகுதியில் வெட்டியதில் பாலமுருகன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகனை கொலை செய்த தந்தை பிரியாதன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், பாலமுருகனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியதனிடம் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!