ஜூன் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

 
சபாநாயகர் அப்பாவு

 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  ஜுன் 24 முதல் தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆனால்  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், 24ம் தேதிக்கு பதிலாக ஜுன் 20ல் சட்டப்பேரவையை கூட்டப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்  சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நாளை ஜூன் 12ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அப்பாவு

இது குறித்து நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,” தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 20-ம் தேதி தொடங்கும். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை ஜூன் 12ம் தேதி புதன்கிழமை பதவி ஏற்கிறார்” எனக் கூறினார்.
அதன்படி, ஜூன் 20ம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web