தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் சேர்ப்பு !

 
சாய் சுதர்ஷன்

 இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் ஜூலை 6 முதல் 14 வரை  5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.   இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டு இருப்பதாக  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு   தொடங்க உள்ளது. இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்த தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் சுதர்ஷன்

இதில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ளனர்.  புயல் காரணமாக   ஜிம்பாப்வே சென்றுள்ள அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு மாற்றாக சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  


முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 

சாய் சுதர்ஷன்
ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்) , ஹர்ஷித் ராணா.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 22 வயதான சாய் சுதர்ஷன் இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அந்த தொடரில் 127 ரன்கள் எடுத்தார்.  2 அரை சதங்கள் அடித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web