தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு!

 
செய்முறை தேர்வு

மாணவர்களே.. பொங்கல் விடுமுறை தினங்களில் கொண்டாட்டங்களோடு உங்கள் ஆண்டு தேர்வையும் மறந்து விடாதீங்க. இந்த தொடர் விடுமுறையை முழு ஆண்டுத் தேர்வுக்கானதாகவும் பயன்படுத்திக்கோங்க. இதோ செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. +2 பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி துவங்கி பிப்ரவரி 14ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் முழுசா ஒரு மாதம் தான் இருக்கிறது. 

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

+2 பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறதா? பள்ளிக் கல்வித்துறை !

அதில் தெரிவிக்கப்ப்பட்டவை, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு, பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரித் தேர்வுகளை பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

முன்னதாக, 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த ஆண்டு அறிவித்தார். இதேபோல் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடக்கிறது.பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடக்கிறது.அதன்பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி முதல்  ஏப்ரல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. . அதன்பின் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web