தேசிய சோலா கார் பந்தயத்தில் தமிழக மாணவர்கள் அசத்தல்!!

 
கோவை மாணவர்கள்

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலையேற்றம் இவைகள் வாகன ஓட்டிகளை பெரும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக   எலக்ட்ரிக் வகை கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சக்கைபோடு போட்டுக் கொண்டுள்ளன.   முண்ணனி  நிறுவனங்கள் மின்சார   கார்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கோவையைச் சேர்ந்த பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள், சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, கோவை
 அதன்படி மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டனர்.  சமீபத்தில்  நாக்பூரில் நடைபெற்ற சோலார் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள்  முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, கோவை

தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவர்களுக்கு, கல்லூரி சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.  இது குறித்து மாணவ, மாணவியர் “ அடுத்த தலைமுறை நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன்  பெட்ரோல், டீசல் இல்லாத சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web