தடுமாறுது தமிழகம்... மோசமான முன்னுதாரணம்... அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பிக்கு 3வது முறையாக சம்மன்!

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவர் சகோதரர் அசோக் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனையும், தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனையும் நடந்தது. இது தொடர்பாக அசோக் ஆஜராகும்படி 2 துறைகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதிக்கு முந்தைய வாரமே சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி

ஆனால், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் கடந்த 20ம் தேதி ஆஜராகவில்லை. அதே நேரம், அமலாக்கத்துறை விசாரணைக்கு  ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்ட வேண்டியதிருப்பதால் வேறு ஒருநாளில் ஆஜராகிறேன் என்று அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், 3வது முறையாக அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் வரும் 27ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி

இந்நிலையில் அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் தமிழகம் அடுத்த மஹாராட்டிரா ஆகுமா என்ற ஆவல் எழுந்திருக்கிறது. அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்கிறார்கள் விபரமானவர்கள். கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்து தானே ஆக வேண்டும். எல்லாம் தமிழக மக்களின் தலைவிதி என்கிறார்கள் தலை நகர் வட்டாரா பட்சிகள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்