தமிழ்நாட்டு வீரர் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் வெண்கலம் வென்று சாதனை !

 
ரமேஷ்
 


மாமல்லபுரத்தில்   ஆசிய அலைச்சறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது.   இந்த போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.  12.60 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

அலைச்சறுக்கு

இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் ஓபன் பிரிவில் கால்இறுதியில் இந்திய வீரர் ரமேஷ் புடிஹால், முதலிடம் பிடித்தார். 

அலைச்சறுக்கு

பின்னர் நடந்த அரையிறுதியில் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சொந்தமாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?