தமிழகத்தில அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்... கண்டுக்கொள்ளாத அரசு!

 
தீனதயாளன்

தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருட்கள் பயன்படுத்தி பல இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் தங்களது எதிர்காலத்தைப் பாழாக்கி கொள்கின்றனர். பலர் உயிரையும் இழக்கின்றனர். ஆனால், இது குறித்தெல்லாம் அரசு கடும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்து வருகிறது.

திமுகவைச் சேர்ந்தவர்களே போதைப் பொருட்களின் கடத்தல்களிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பான்பராக் போன்ற போதைப் பாக்குகளை விற்கிறார்கள் என்று சட்டசபைக்குள் ஆவேசமாக சென்று சட்டையை எல்லாம் கிழித்துக் கொண்டு பேட்டியளித்த ஸ்டாலின், தற்போது முதல்வராக இருக்கும் போது, போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்குவது குறித்து என்ன செய்ய போகிறார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கங்கராய எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கஞ்சாமணி என்கிற தீனதயாளன் (26). பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, ஐசிஎப், வடபழனி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, தாக்குதல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

போதைக்கு அடிமையான கஞ்சா மணி, வழக்கமான போதை ஊசி போடுபவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கஞ்சா மணி தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), பிரபு (20) ஆகியோருடன் பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து போதை மருந்தை உடலில் செலுத்தினர்.

கஞ்சா போதையில் மூச்சு திணறி பேசாமல் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டாளிகள் அவரை மீட்டு புளியந்தோப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று விட்டு ஓடியதாக தெரிகிறது. அங்கு டாக்டர்கள் கஞ்சாவுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கஞ்சாமணி இன்று காலை உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீசார் கஞ்சா மணியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சஞ்சய், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போதை ஊசியால் சென்னையில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!