தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
இந்த வருடம் தீபாவளி பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பலரும் அதிருப்தியில் இருந்தனர். சொந்த ஊருக்கு தீபாவளி விடுமுறைக்கு செல்பவர்களுக்கும், சனி, ஞாயிறு என இரு தினங்கள் மட்டுமே விடுமுறை தினங்களாக அமைந்ததால், பலரும் தீபாவளிக்கு ஊருக்குச் சென்று வர திட்டமிடுவதில் சிரமத்திற்குள்ளானார்கள். இந்நிலையில், தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாளான நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க கோரி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் அடுத்த நாள், திங்கட்கிழமை தீபாவளி நோன்பு பண்டிகையை பலரும் கொண்டாடுவர். அதே சமயம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள், அன்று ஞாயிற்றுக்கிழமை இரவே கிளம்பினால் தான் அடுத்த நாள் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர் 13ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி முழு பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!