தமிழிசை சௌந்திரராஜன் அதிரடி கைது... தலைநகரில் பரபரப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். வள்ளுவர் கோட்டத்தில் துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு போராட்டம் என அறிவித்துவிட்டு வந்த பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வகையில் 10க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தர்ராஜன், கைது செய்யப்படும்போது அளித்த பேட்டியில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும்,பாலியல் வன்கொண்டுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இது போன்ற குற்றங்களை நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறை காட்டவில்லை என கூறியுள்ளார். போலீசார் சிறிய கூட்டமாக வந்த பாஜகவினரை உடனடியாக கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!