அடுத்த தலைமைச் செயலாளர் யார்... ரேஸில் முந்தும் சிவ்தாஸ் மீனா! டிஜிபி லிஸ்ட்டும் ரெடி!

 
தலைமை செயலாளர் டிஜிபி


 தமிழகத்தின் தலைமை செயலாளராக இறையன்புவும், தலைமை டிஜிபியாக சைலேந்திர பாபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க நிர்வாக பொறுப்புகள் இவை தான். இவை சரியாக அமைந்து விட்டால்  அரசு நிர்வாக இயந்திரம் சரியாக செயல்பட்டு விடும்.  தமிழகத்தை பொறுத்தவரை  இந்த 2  பொறுப்புகளுக்குமே முதல்வர்கள் தங்களுக்கு நெருக்கமான திறமையான அதிகாரிகளை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிப்பது தான்  வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளராக இறையன்புவும், டிஜிபியாக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள்  இரண்டுமே சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதே நேரத்தில் தற்போது இருவரின் பணிக்காலமும் முடியும் தருவாயில் உள்ளது.  

சிவதாஸ்மீனா சங்கர் ஜிவால்

2  பொறுப்புகளும் ஒரே நேரத்தில் காலியாக உள்ளதால் இந்த இடங்களை பிடிக்க அதிகாரிகள் மத்தியில் பலத்த போட்டி நிலவி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை செயலாளர் பதவிக்கு வகையில், முருகானந்தம், அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், சிவதாஸ் மீனா   பெயர்கள் ரேசில் உள்ளன.  குறிப்பாக சிவதாஸ் மீனாவின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல், சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால் ஆகியோரது பெயர்கள் டிஜிபி ரேசில் உள்ளன. இதில் சங்கர் ஜிவால் பெயர் முதலிடத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிவ்தாஸ் மீனாவுக்கே அடுத்த தலைமைச் செயலாளராக அதிக வாய்ப்பு என்கிறது கோட்டை வட்டாரம். 

டிஜிபி பதவியை பொறுத்தவரை தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் பட்டியலை  மத்திய பணியாளர் தேர்வாணையமும், உள்துறை அமைச்சகமும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி ஆய்வு செய்யும். மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி 3 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசிடம் கொடுக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்வது தான் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. முதல்வரை பொறுத்தவரை  இந்த பொறுப்புகளுக்கு தகுதிவாய்ந்த திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எந்த அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவரது நேரடி பார்வையில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய பொறுப்புகளுக்கு முன்னனியில் இருக்கும் சிவதாஸ் மீனா, சங்கர் ஜிவால்  இருவருமே  வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். 1989ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சிவதாஸ் மீனாவின்  பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். ஜெயலலிதாவின்  மறைவுக்கு பிறகு  மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட சிவதாஸ் மீனா  முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவதாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.  

இறையன்பு சைலேந்திரபாபு
1990 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.   தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில்  ஸ்டாலினை முதலில் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்து கூறியவர்.   30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ள சங்கர் ஜிவால், ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து  சமீபத்தில் தான் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.   அப்போதே அடுத்த டிஜிபியாக அவர் நியமிக்கப்படலாம் என தகவல் கசிந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் தலைமை பொறுப்புக்களுக்கு நியமிக்கப்படும் இருவரில் ஒருவராவது தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.   முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே பெயர் பட்டியல் தயாராகி விட்டதாகவும், 2 கட்ட ஆலோசனை நடத்தப்பட இருந்த சமயத்தில் தான்   ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதால் அதில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.  2 பேரின்  பதவிக்காலமும் விரைவில் முடிவடைய இருப்பதால் விரைந்து   முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்  முதல்வர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web