அதிர்ச்சி... இந்தியாவிலும் புதிய வகை கொரோனா... மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
எனக்கு எண்ட் கார்டே போட முடியாது என்று கொக்கரித்து வருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக உலகம் மெல்ல பேரழிவில் இருந்தும் பொருளாதார ரீதியாகவும் மீண்டு எழ முயற்சித்து வரும் நிலையில்,

கடந்த வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில் 25,000க்கும் அதிகமானவர்களுக்கு புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புதிய வகை கொரோனா தொற்று, இந்தியாவிலும் சில பகுதிகளில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்நிலையில், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை என்று கூறியிருக்கும் சுகாதாரத்துறை அதே சமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்றும், முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
