ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து..!! இளைஞர் வெறிச்செயல்!!

 
சீதா

கேரள மாநிலம் மூணாறில் இருந்து பெங்களூருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்தில் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த சீதா மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சனில் என்ற இருவர் பெங்களூருவுக்கு பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்டனர். வென்னியூர் அருகே உள்ள திருரங்காடியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென சனில், சீதாவை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பயணிகள் அலறினர். என்ன நடந்தது என பார்ப்பதற்குள் பெண்ணை கத்தியால் குத்திய சனிலும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சீதா

இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கத்திகுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, தாக்குதல் நடத்தியவரும், தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த பேருந்தில் பலரும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முன்பதிவு செய்யவில்லை. 

சீதா

இதில், இளம்பெண் அங்கமலியில் இருந்தும், சனில் எடபாலில் இருந்தும் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் கூறினர். எனினும் எதற்காக கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்றார் என்பது குறித்து, மருத்துவமனையில் இருப்பவர்கள் பேசினால் தான் தெரியவரும் எனவும் போலீசார் கூறினர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!