குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பலி... உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு!
குவைத்தில் மங்காப் நகரில் ஜூன் 12ம் தேதி அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. உடனடியாக குவைத் விரைந்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் நலம் விசாரித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் ” பலி எண்ணிக்கையை தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குவைத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் ராம கருப்பண்ணன், தூத்துக்குடி வீராசாமி மாரியப்பன், கடலூர் சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் முகமது ஷரீப் , தஞ்சாவூர் புனாப் ரிச்சர்ட் ராய் , திருச்சி எபமேசன் ராஜு மற்றும் சென்னை கோவிந்தன் சிவசங்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் சடலங்களும் கொச்சி விமான நிலையத்திற்கு இந்திய ராணுவ விமானத்தின் முலம் கொண்டுவரப்பட்டுள்ளன. இவர்கள் 7 பேரின் உடல்களும் வந்ததும், தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சடலங்களை பெற தமிழகத்தில் இருந்து செஞ்சி மஸ்தான் கொச்சி விரைந்துள்ளார். அதே நேரத்தில் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அரசு 8 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
