நவம்பர் 9ம் தேதி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!!

 
டேங்கர் லாரி

இந்தியா முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்து நவம்பர் 9ம் தேதி லாரிகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன. இது குறித்து எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பரபரப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ”மோட்டார் வாகன வரியை  திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி  நவம்பர் 9 ம் தேதி  தமிழகம்   முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன.  

தண்ணீர் லாரி

சுங்க கட்டணம், டயர்  போன்ற  உதிரி பாகங்கள் விலை,  3 ம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் விலை உயர்வால் நாளுக்கு நாள் லாரி தொழில் நசிந்து வருகிறது.  இந்நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500 ல் இருந்து ரூ.750 ஆகவும் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596 ல் இருந்து ரூ.904 உயர்த்தி ரூ.4,550 ஆகவும் 10 சக்கர லாரிகளுக்கு ரூ.4,959 ல் இருந்து ரூ.2,041 உயர்த்தி ரூ.7,059 ஆகவும் 12 சக்கர லாரிகளுக்கு ரூ.6,373 ல் இருந்து ரூ.3,327 உயர்த்தி ரூ‌9,170 ஆகவும் 14 சக்கர லாரிகளுக்கு ரூ.7,787 ல் இருந்து ரூ.3,413 உயர்த்தி ரூ.11,290 ஆகவும் 16 சக்கர லாரிகளுக்கு ரூ.4,200 உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூன் 28ம் தேதி கருப்பு தினம்! லாரி உரிமையாளர்கள் சங்கம்!


 தமிழகத்தில் விதிக்கப்பட்ட இந்த வரி உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட உள்ளது.   அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது ” எனத் தெரிவித்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web