மறுமணத்திற்கு பதிவு செய்யும் பெண்கள் தான் டார்கெட்.. மோசடி செய்த இளைஞரை கைது செய்த போலீசார்!

 
மோகன்

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் திருமண தகவல் மையம் மூலம் தன்னை தொடர்பு கொண்ட கோவையை சேர்ந்த லெனின் மோகன் (34) என்பவர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருவதாக புகார் அளித்திருந்தார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் உத்தரவின் பேரில், கோவையை சேர்ந்த சைபர் கிரைம் கூடுதல் கமிஷனர் லெனின் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட் மோகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பார்களுக்குச் சென்று மது அருந்திவிட்டு பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருக்க பணம் தேவைப்படும்போதெல்லாம் திருமணமாகாத பெண்கள் மற்றும் கணவரை விவாகரத்து செய்து திருமணத்திற்கு பதிவு செய்த பெண்களை குறிவைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்து ஏமாற்றி வந்துள்ளார்.

கைது

இதையடுத்து, அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் இது தொடர்பாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web