3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. அதிரடி அறிவிப்பு!!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

தமிழகத்தில்  இன்று அக்டோபர் 27ம் தேதி மற்றும் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதியும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மருதுபாண்டியர் குருபூஜை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டப்பாடுகளை மாவட்ட நிர்வாகம்  எடுத்துள்ளது.  

டாஸ்மாக்

இந்நிலையில் மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் குரு பூஜையையொட்டி மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளை மறுதினம்  மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு  மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனமகிழ் மன்றங்கள், பார்கள்  அனைத்தும் மூடப்படவேண்டும் என   உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள உள்ளனர்.  

டாஸ்மாக்

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் பசும்பொன் பகுதிக்கு வர உள்ளதால் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில்    28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web