மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி... தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

 
டாஸ்மாக்

 தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  அறிவிப்பால் குடிமகன்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் இன்று மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்கள் நிகராக பெண்களும் மதுக்குடிக்கும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் உட்பட   சுப நிகழ்ச்சிகள் எல்லாமே  மதுவிருந்து பார்ட்டிகளுடன் தான் அரங்கேற்றமே.  துக்க நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் பரவி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மது விற்பனை அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடிக்கும் விற்பனையாகி அரசு கஜானாவை நிரப்புவதில் அதிரடி காட்டி வருகிறது.  அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி குடிமகன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டாஸ்மாக்


இது குறித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே ” ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம்  என 2 நாட்கள்  தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும்” என அறிவித்துள்ளார்.  தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடுமுறையானது  தமிழகம் முழுவதும் பொருந்தும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web