இனி 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக்!! மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி!!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் மதுபானக் கடைகள் அரசு சார்பில் டாஸ்மாக்கின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட விலையை காட்டிலும் பாட்டிலுக்கு ரூ10 அதிகமாக வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இது குறித்து அதிகாரிகள் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு  புதிய கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன. இதனை  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!
அதன்படி
மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும் .
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும்  விதிமீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும்.
முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!
 சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும் பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் அதன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து , காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால்,  அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனங்களில்  இருந்து 100 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும். வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. 
அதே போல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தையும்  முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web