இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு... நேற்றே குவிந்த ‘குடி’மகன்கள்!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

டச் பண்ணாலே சரக்கு பாட்டில் கைக்கு வரும் என்று டாஸ்மாக், விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி கல்லா கட்ட துவங்கி இருக்கிறது. அதன் எதிரொலி தான் விளையாட்டு மைதானங்கள், பார்ட்டிகள், திருமண நிகழ்ச்சிகள் என்று சகல இடங்களிலும் சரக்கு கிடைக்கும் என்கிற சிந்தனை. இப்படி சகலத்திலும் சரக்கு வியாபாரம் செய்து கல்லா கட்ட நினைப்பது போல், தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் யோசித்தால், தமிழகம் நிச்சயமாக எப்போதோ முன்னேறி இருக்கும்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

உதாரணத்திற்கு பள்ளி கல்வித்துறை அதள பாதாளத்தில் இருக்கிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு இதுவரையிலான நிரந்தர தீர்வு கிடையாது. நீட் தேர்வுக்கு மாற்றோ.. அல்லது நீட் தேர்வுக்கு மனதளவில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளோ கிடையாது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பொதுத்தேர்வை புறக்கணித்திருக்கிறார்கள். அதைப் பற்றி கடந்த வருடம் முயற்சி எடுத்திருந்தால், இந்த வருடமாவது அவர்கள் வாழ்க்கைப் பாதையை சீரமைத்திருக்கலாம்... சரி... சரி..  வந்த வேலையைப் பார்க்கலாம் வாங்க. எழுத வந்த விஷயமே வேற.

இன்று மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். உழைப்பவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அதனால், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால்  நேற்று மாலை முதலே ‘குடி’மகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இன்று அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உழைப்பாளர் தினத்தையடுத்து பொது விடுமுறை என்பதால் பலரும் கைநிறைய பாட்டில்களை வாங்கிச் சென்று ஸ்டாக் வைக்க துவங்கினார்கள். இதனால் நேற்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் நடந்த நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் மெகா டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க பார்களிலும் ‘குடி’மகன்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

டாஸ்மாக்

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

மே தினத்தை முன்னிட்டு, தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது  மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!